உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 3 நாட்கள் வரி வசூல் மையம் திருத்தணி நகராட்சியில் மூடல்

3 நாட்கள் வரி வசூல் மையம் திருத்தணி நகராட்சியில் மூடல்

திருத்தணி:திருத்தணி நகராட்சியில் 21 வார்டுகளில், 14,000 குடும்பத்தினர் மற்றும் 3,000க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் உள்ளன. இவற்றிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் உரிமம் மற்றும் வரி போன்றவை நகராட்சி நிர்வாகம் வசூலித்து வருகிறது.வாடிக்கையாளர்கள் வரி செலுத்த வசதியாக, நகராட்சி அலுவலகத்தில் வாரத்தில் ஆறு நாட்களும், காலை 9:00 - மாலை 5:00 மணி வரை வசூல் மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரி இனங்களும் செலுத்தலாம்.நேற்று முதல் நாளை வரை மூன்று நாட்களுக்கு, ஆண்டு கணக்கு கணினியில் முடிக்கப்படப்பட உள்ளதால், வரி மையம் செயல்படாது என, நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை