கள்ளக்காதலியை எரித்து கொன்ற ஆட்டோ ஓட்டுனரும் உயிரிழப்பு
எண்ணுார்,எர்ணாவூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் நுாரிஷா, 42. இவருக்கும், திருவொற்றியூர், தாங்கல் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான டில்லிபாபு, 47, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.கடந்த 9ம் தேதி, இவரது வீட்டிற்கு வந்த டில்லிபாபு தகராறில் ஈடுபட்டுள்ளார். திடீரென தான் எடுத்து வந்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதுடன், நுாரிஷாவையும் கட்டி பிடித்துக் கொண்டார். இதில், இருவர் மீதும் தீ மளமளவென பற்றி எரிந்தது. இவர்களது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில், நுாரிஷாவை காப்பாற்ற முயன்ற அவரது தாயும் காயமடைந்தார். பலத்த காயமடைந்த நுாரிஷா மற்றும் டில்லபாபு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.அங்கு, 11ம் தேதி மதியம் நுாரிஷா உயிரிழந்தார். நேற்று அதிகாலை டில்லிபாபுவும் பலியானார். இது குறித்து எண்ணுார் போலீசார் விசாரித்தனர். இதில், இருவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக நுாரிஷா, டில்லிபாபுவுடனான உறவை துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்தவர், பெட்ரோல் ஊற்றி தீக்குளித்ததுடன் அப்பெண்ணையும் கட்டிப் பிடித்துள்ளார் என, தெரிய வந்தது.