உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குளத்தில் பாய்ந்த ஆட்டோ மூவர் உயிர் தப்பினர்

குளத்தில் பாய்ந்த ஆட்டோ மூவர் உயிர் தப்பினர்

திருவள்ளூர்:திருமழிசை பேரூராட்சி மேட்டுதாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன், 45. ஆட்டோ ஓட்டுனரான இவர் நேற்று முன்தினம் காலை தனது ஆட்டோவில் தனது இரு குழந்தையையுடன் கிளம்பினார். வீட்டின் அருகே உள்ள குளம் அருகே ஆட்டோ திரும்பும் போது நிலை தடுமாறி குளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதை கண்ட அப்பகுதிவாசிகள் விரைந்து வந்து லட்சுமணனையும் குழந்தைகளையும் காப்பாற்றினர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படுவில்லை.பின் குளத்தில் விழுந்த ஆட்டோவை கயிறு கட்டி டிராக்டர் மூலம் மீட்டனர். குளத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாத விபத்துக்கு காரணம் என பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ