உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தாலுகா அலுவலகம் எதிரே பாலம் விரிவாக்கம் அவசியம்

தாலுகா அலுவலகம் எதிரே பாலம் விரிவாக்கம் அவசியம்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே, மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது. ஆர்.கே.பேட்டையில் இருந்து இந்த வழியாக சோளிங்கர், வேலுார், சித்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த வழியாக வரும் பேருந்துகளில், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பகுதிவாசிகள், சாலையோரம் காத்திருக்க நிழற்குடை உள்ளது. ஆனால், சாலையோரம் நடந்து செல்ல போதிய இடவசதி இல்லை. தார் சாலையை ஒட்டி, பாலம் தடுப்பு சுவர் அமைந்துள்ளது. இதனால், இருசக்கர வாகனஓட்டிகளும், பாதசாரிகளும் போதிய இடவசதி இன்றி விபத்து அச்சத்தில் தவிக்கின்றனர். பாலத்தை விரிவு படுத்தவும், சாலையோரம் பேருந்துகள் நின்று செல்ல சர்வீஸ் சாலையும் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம், காவல் நிலையம், வட்டார கல்வி அலுவலகம் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மக்கள் நடமாட்டம் மிக்க இந்த பகுதியில், சாலையை சீராக பராமரிக்கவும், சர்வீஸ் சாலை ஏற்படுத்தவும் நெடுஞ்சாலை துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ