உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / துர்நாற்றம் வீசும் வானியன் குட்டை ஊராட்சி நிர்வாகம் பாராமுகம்

துர்நாற்றம் வீசும் வானியன் குட்டை ஊராட்சி நிர்வாகம் பாராமுகம்

திருப்பந்தியூர்:திருப்பந்தியூர் ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், ஆகாயத்தாமரை சூழ்ந்து துர்நாற்றம் வீசும் வானியன் குட்டையால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். கடம்பத்துார் ஒன்றியத்தில் திருப்பந்தியூர் ஊராட்சி அமைந்துள்ளது. இப்பகுதியில், பண்ணுார் - வடமங்கலம் நெடுஞ்சாலையோரம் நிழற்குடை எதிரே வானியன் குட்டை உள்ளது. அப்பகுதி மக்கள், இந்த குட்டை நீரை பயன்படுத்தி வந்தனர். இந்த குட்டை போதிய பராமரிப்பு இல்லாததால், ஆகாயத்தாமரை வளர்ந்துள்ளது. மேலும், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குட்டையில் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், இவ்வழியே செல்லும் பகுதிமக்கள் கடும் அவதிப்பட்டு வருவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, வானியன் குட்டையை துார்வாரி சீரமைக்க வேண்டுமென, திருப்பந்தியூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ