உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா

திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா

பொதட்டூர்பேட்டை,:பொதட்டூர்பேட்டை திரவுபதியம்மன் தீமிதி திருவிழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் 18ம் நாளான நேற்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. 18ம் போர்க்களத்தில், துரியோதனனை இழந்த காந்தாரி, ஆவேசமாக அங்கிருந்தவர்களை அடித்து துவம்சம் செய்தார். சபதம் நிறைவேற்றிய திரவுபதியம்மன், கூந்தலை முடிந்து தீர்த்தவாரிக்கு புறப்பட்டார். உடன், விரதம் மேற்கொண்டுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களும் வலம் வந்தனர். மாலை 6:00 மணிக்கு அக்னி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ