உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பெண்ணை தாக்கிய மூவருக்கு வலை

 பெண்ணை தாக்கிய மூவருக்கு வலை

திருவள்ளூர்: சொத்து தகராறில் பெண்ணை தாக்கிய மூவர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பத்தைச் சேர்ந்தவர் அனுபிரியா, 31. இவருக்கும், உறவினர் கந்தசாமி, 54, என்பவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்தது. கடந்த 9ம் தேதி மாலை, இவரது வீட்டிற்கு வந்த கந்தசாமி, திலீப்குமார், மற்றும் கதிர்வேல் ஆகிய மூவரும், அனுபிரியாவை தாக்கி, வீட்டிலிருந்த பொருட்களை சேதப் படுத்தி சென்றனர். இதுகுறித்து, நேற்று முன்தினம் அனுபிரியா அளித்த புகாரின்படி, திருவள்ளூர் நகர போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !