உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / லாரி திருடிய மூவர் கைது

லாரி திருடிய மூவர் கைது

பொன்னேரி:சென்னை, நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் ரவிகுமார். 30. இவருக்கு சொந்தமான லாரி, கடந்தாண்டு அக்டோபர் மாதம், செங்குன்றம் அருகே நல்லுார் பகுதியில் மாயமானது. சோழவரம் போலீசார் வழக்கு பதிந்த நிலையில், கண்காணிப்பு கேமரா பதிவில், மூன்று பேர் கும்பல், லாரியை திருடி சென்றது தெரிந்தது.இந்நிலையில், நேற்று வண்டலுார் -- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் லாரி நின்றுக் கொண்டிருந்தது. தகவல் அறிந்து சென்ற போலீசார், லாரியில் இருந்த மூவரிடம் விசாரித்ததில், அவர்கள் லாரியை திருடியது தெரியவந்தது. விசாரணையில், அரியலுார் வேல்முருகன், 28, தஞ்சாவூர் ஆனந்தன், 29, மேல்மலையனுார் மணிகண்டன், 29,என்பது தெரியவந்தது. மூவர் மீதும் வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி