மேலும் செய்திகள்
கட்டட தொழிலாளி வீட்டில் நகை திருடிய இருவர் கைது
14-May-2025
ஊத்துக்கோட்டை:திம்மபூபாலபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெயச்சந்திரன், கடந்தாண்டு டிச., 8ல் குடும்பத்துடன் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றார். ஐந்து நாட்களுக்கு பின் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 9 சவரன் திருடுபோனது.அதேபோல், போந்தவாக்கம் கிராமத்தில், கடந்த மார்ச் 17ம் தேதி ஜானகிராமன் என்பவர் நுங்கம்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, மறுநாள் வீட்டிற்கு வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 7 சவரன் நகை, 60,000 ரூபாய் திருடுபோனது. இதுகுறித்து ஜெயச்சந்திரன், ஜானகிராமன் ஆகியோர் பென்னலுார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., சாந்தி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர். நேற்று முன்தினம் சீத்தஞ்சேரி பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும்படி மூன்று பேர் சுற்றித் திரிந்தனர்.போலீசார் அவர்களிடம் விசாரித்ததில், ராணிப்பேட்டையைச் சேர்ந்த விஜய், 30, ஞானப்பிரகாசம், 35, மனோ, 30 என தெரியவந்தது. இவர்கள், மேற்கண்ட இரண்டு வீடுகளில் திருடியதையும் ஒப்புக்கொண்டனர். மேலும், விஜய் வீட்டில் வைத்திருந்த பணம், நகையை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும், ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
14-May-2025