உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரவுடி கொலை வழக்கில் மூன்று பேர் கைது

ரவுடி கொலை வழக்கில் மூன்று பேர் கைது

மணவாளநகர்: ரவுடியை வெட்டிக்கொன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகர் கபிலர் நகரை சேர்ந்த நவீன், 24, இவருக்கு ஷீபா, 24 என்ற மனைவியும் 4, 1 வயதில் மகன், மகள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் காலை வெங்கத்துார் ஏரிக்கரை பகுதியில் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து இவரது மனைவி ஷீபா கொடுத்த புகாரையடுத்து மணவாளநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த மணவாளநகரை சேர்ந்த பிரவீன் 26, விக்னேஷ், 20, ஆகாஷ் 19 ஆகிய மூவரை நேற்று காலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி