சரிந்தது தக்காளி விலை
திருவள்ளூர்: திருவள்ளூரில் தக்காளி, 7 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அண்டை மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது, மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் 1 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்து குறைவால் விலையேற்றம் இருந்ததாக வியாபாரிகள் கூறினர். தற்போது வரத்து அதிகரிப்பால், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை அதிரடியாக சரிந்துள்ளது. அதன்படி, 1 கிலோ தக்காளி 15 - 25 ரூபாய் வரை விற்பனையாகிறது. வெங்காயம் 20 - 30 ரூபாய் வரை விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில், 1 கிலோ தக்காளி 30 ரூபாய் மற்றும் வெங்காயம் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. நேற்று திருவள்ளூர் பகுதியில் 7 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கும், 4 கிலோ வெங்காயம் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.