அளவுக்கு அதிகமான கரும்புகள் ஏற்றி செல்லும் டிராக்டர்களால் அபாயம்
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம், திருவாலாங்காட்டில் இயங்கி வருகிறது திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை. இந்த ஆலைக்கு பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மற்றும் திருத்தணி ஆகிய தாலுகாவில் இருந்து, விவசாயிகள் கரும்புகளை வெட்டி டிராக்டர்கள் மூலம் திருவாலங்காட்டிற்கு கொண்டு செல்கின்றனர்.டிராக்டர்களில் அதிகளவில் கரும்புகள் எடுத்துச் செல்வதால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதாவது ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மார்கத்தில் இருந்து டிராக்டர் மூலம் கரும்பு கொண்டு செல்லும் போது திருத்தணி நகரம் மற்றும் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுதவிர கரும்புகள் அதிகபாரத்துடன் டிராக்டர்கள் செல்வதால் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகிறது.எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் அதிகளவில் கரும்புகளை கொண்டு செல்லும் டிராக்டர்கள் மீது அபராதம் விதிப்பதுடன், பறிமுதல் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.