உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அம்மப்பள்ளி அணைக்கட்டு திறப்பு 3 தரைப்பாலங்களில் போக்குவரத்து துண்டிப்பு

அம்மப்பள்ளி அணைக்கட்டு திறப்பு 3 தரைப்பாலங்களில் போக்குவரத்து துண்டிப்பு

பள்ளிப்பட்டு:'பெஞ்சல்' புயலால் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு மற்றும் ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மப்பள்ளி அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், அம்மப்பள்ளி அணைக்கட்டு முழு கொள்ளளவு எட்டியது.இதையடுத்து, நேற்று முன்தினம், இரவு 10:00 மணிக்கு, அம்மப்பள்ளி அணைக்கட்டில் இருந்து இரண்டு ஷெட்டர்கள் வாயிலாக 1,000 கனஅடிநீர் வெளியேற்றம் செய்யப்பட்டது.தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால், நேற்று மதியம், அணைக்கட்டில் இருந்து 2,000 கனஅடிநீர் வெளியேற்றம் செய்யப்பட்டது. இதனால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இதனால், பள்ளிப்பட்டு ஒன்றியம், வெடியம், சொராக்காய்பேட்டை, சத்திரவாடா ஆகிய பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தின் மீது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.பள்ளிப்பட்டு மற்றும் பொதட்டூர்பேட்டை போலீசார் தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு அமைத்தும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், தரைப்பாலத்தின் வழியாக வாகனங்கள் மற்றும் மக்கள் நடந்து செல்லக்கூடாது என, வருவாய் துறையினர் கிராமங்களில் அறிவித்து வருகின்றனர்.மேற்கண்ட மூன்று இடங்களில் தரைப்பாலத்தின் மீது வெள்ளம் செல்வதால், 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.இதனால் கிராமத்தினர், அத்தியாவசிய பணிகள் காரணமாக, 50 கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் அங்கு தங்கியிருந்து கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை