உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ‘ரிட்டர்ன்’ டிக்கெட் வழங்க ரயில் பயணியர் கோரிக்கை

‘ரிட்டர்ன்’ டிக்கெட் வழங்க ரயில் பயணியர் கோரிக்கை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் உள்ள எளாவூர் மற்றும் ஆரம்பாக்கம் ரயில் நிலையங்களில், ‘ரிட்டர்ன்’ டிக்கெட் வழங்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக, சூளூர்பேட்டை வரை தினசரி, 15 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த மார்க்கத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டியை கடந்து, தமிழக எல்லைக்கு உட்பட்ட எளாவூர் மற்றும் ஆரம்பாக்கம் ஆகிய இரு ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த இரு ரயில் நிலையங்களிலும், தினசரி நுாற்றுக்கணக்கான கிராம மக்கள், புறநகர் மின்சார ரயில்களில் பயணித்து வருகின்றனர். அந்த ரயில் நிலையங்கள், சென்னை புறநகர் பகுதிக்குள் வராததால், அங்குள்ள டிக்கெட் கவுன்டர்களில், ‘ரிட்டர்ன்’ டிக்கெட் தரும் வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது. இதனால், ரயில் பயணியர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எளாவூர், ஆரம்பாக்கம் பகுதியில் இருந்து, ரயிலில் சென்னை சென்று திரும்பும் பயணியர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் காத்திருந்து டிக்கெட் பெற்று வர வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, கிராம மக்களின் நலன் கருதி, இரு ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர்களில், ரிட்டர்ன் டிக்கெட் வழங்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை