மேலும் செய்திகள்
தெருநாய் கடியால் பாதிப்போர் அதிகரிப்பு
23-Sep-2024
திருத்தணி: திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலைகளில் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரியும் நாய்கள் நடந்து செல்பவர்களை விரட்டுகின்றன. சில நேரங்களில் கடிக்கின்றது.குறிப்பாக, இரவு நேரத்தில் நடுசாலை மற்றும் தெருக்களில் நாய்கள் படுத்து உறங்குவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து காயம் அடைகின்றனர்.இதனால் மக்கள் தனியாக நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே திருத்தணி நகராட்சியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
23-Sep-2024