உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பஸ் ஓட்டுனரை தாக்கிய இருவர் கைது

பஸ் ஓட்டுனரை தாக்கிய இருவர் கைது

திருத்தணி, திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து, தடம் எண் - டி65 என்ற அரசு பேருந்து ஆர்.கே.பேட்டை வழியாக வீரமங்கலம் வரை இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு வீரமங்கலத்தில் இருந்து திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தது.பேருந்தை தற்காலிக ஓட்டுநர் சிலம்பரசன், 30, என்பவர் ஓட்டி வந்தார். நடத்துநராக பொன்னுசாமி, 45, பணியில் இருந்தார். இரவு 7:30 மணிக்கு கே.ஜி.கண்டிகை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தினார்.அப்போது, மர்ம நபர்கள் இருவர் திடீரென ஓட்டுநரை சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, கே.ஜி.கண்டிகை பகுதியில் இருக்கும் 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்ததில், செருக்கனுார் காலனியைச் சேர்ந்த, ஆகாஷ், 23, தமிழ்செல்வன், 19, என தெரிந்தது.நேற்று மாலை போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி