உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பிளாஸ்டிக் பயன்படுத்திய இரு கடைகளுக்கு அபராதம்

பிளாஸ்டிக் பயன்படுத்திய இரு கடைகளுக்கு அபராதம்

பூந்தமல்லி:பூந்தமல்லி ஒன்றியம், மேப்பூர் ஊராட்சியில், 'துாய்மை பாரத இயக்கம்' சார்பில், துாய்மைப்படுத்தும் பணிகள் நேற்று நடந்தன. இதில், மேப்பூர் ஊராட்சியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. அப்போது, பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்பாபு தலைமையில், வணிக கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், பிளாஸ்டிக் கவர்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய இரண்டு கடைகளில் இருந்து, 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டு கடைகளுக்கும், தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை