உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  இரு கோவிலில் திருட்டு மர்மநபர்கள் கைவரிசை

 இரு கோவிலில் திருட்டு மர்மநபர்கள் கைவரிசை

கடம்பத்துார்: இரு கோவில்களில் நகை, பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். கடம்பத்துார் அருகே செஞ்சி பானம்பாக்கம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று காலை கோவிலுக்கு வந்து பார்த்த பூசாரி, பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். கோவிலின் உள்ளே சென்று பார்த்த போது, அம்மன் கழுத்திலிருந்த 1 சவரன் தங்க தாலி செயினை, மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. அதேபோல், அருகே உள்ள முருகன் கோவிலிலும் உண்டியலை உடைத்து, அதிலிருந்த 1,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின்படி, கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை