உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தூர்வாராத கழிவுநீர் கால்வாய் நோய் தொற்று பரவும் அபாயம்

தூர்வாராத கழிவுநீர் கால்வாய் நோய் தொற்று பரவும் அபாயம்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது சின்னகளக்காட்டூர் கிராமம். இங்கு 10க்கும் மேற்பட்ட தெருக்களில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.கிராமத்தில் உள்ள பெரும்பாலான கழிவுநீர் கால்வாய், பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல், துார்வார முடியாத நிலையில், சிதைந்து கிடக்கிறது. இதனால், கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. மழைக்காலத்தில், மழைநீரும், கழிவுநீரும் தெருவில் பாய்வது வழக்கமாக உள்ளது.கழிவுநீர் கால்வாயை துப்புரவு பணியாளர்களை கொண்டு ஊராட்சி நிர்வாகம் முறையாக தூர்வாராததால், பல இடங்களில் குப்பையால் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கியுள்ளது.பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால், சுகாதாரம் பாதிக்கப்பட்டு பகுதிவாசிகள் நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாவதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.எனவே, கழிவுநீரை வெளியேற்றவும், கால்வாயை சீரமைக்கவும், ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ