உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூஜையே நடக்காத வேணுகோபாலசுவாமி கோவில்

பூஜையே நடக்காத வேணுகோபாலசுவாமி கோவில்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் களாம்பாக்கம் ஊராட்சி காலனி பகுதியில் அமைந்துள்ளது ராதா ருக்மணி சமேத வேணுகோபாலசுவாமி கோவில்.இக்கோவில் கட்டடம் பழுதடைந்து இருந்த நிலையில் அதேபகுதியை சேர்ந்தவர்கள் திருப்பணி கமிட்டி அமைத்து 2008ல் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா நடத்தினர். கமிட்டியால் கோவிலை தொடர்ந்து பராமரிக்க முடியாத நிலை உள்ளதுடன், சுவாமிக்கு தினமும் பூஜை செய்ய முடியாத நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர். கோவில் பூட்டியே கிடப்பதால் தினமும் சுவாமியை தரிசிக்க வரும் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் வெளியில் இருந்தபடி வணங்கி விட்டு செல்கின்றனர். எனவே களாம்பாக்கம் வேணுகோபாலசுவாமி கோவிலை ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தினசரி ஒருகால பூஜையாவது நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !