உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சத்துணவு சாப்பிட்ட 6 குழந்தைகளுக்கு வாந்தி

சத்துணவு சாப்பிட்ட 6 குழந்தைகளுக்கு வாந்தி

கும்மிடிப்பூண்டி,எளாவூர் அருகே, நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 25 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.நேற்று, பள்ளிக்கு, 22 மாணவர்கள் வந்திருந்தனர். வழக்கம் போல, மாணவர்கள் மதிய சத்துணவு சாப்பிட்டனர். அடுத்த சில மணி நேரத்தில், சாரதி, 10, யஷ்வந்த், 10, சபரிவாசன், 10, காவியா, 10, யுதிகா, 10, சுமன், 9, ஆகிய ஆறு மாணவர்கள் அடுத்தடுத்து வாந்தி எடுத்தனர்.ஷேர் ஆட்டோ வாயிலாக மாணவர்கள் ஆறு பேரும், கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள், சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி