உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருக்கல்யாண உத்சவம்

திருக்கல்யாண உத்சவம்

ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை அருகே, தீமிதி திருவிழாவில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.எல்லாபுரம் ஒன்றியம், சென்னங்காரணி கிராமத்தில் கடந்த, 13ம் தேதி காலை கணபதி பூஜை, கொடியேற்றத்துடன், 10 நாட்கள் தீமிதி திருவிழா காப்பு கட்டி துவங்கியது. அன்று காலை திரவுபதி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.மறுநாள், 14ம் தேதி பகாசூர சம்ஹாரம், நேற்று முன்தினம் அர்ச்சுனன், திரவுபதி திருக்கல்யாண உற்சவம், நேற்று நச்சுக்குழி யாகம் ஆகிய நிகழ்வுகள் நடந்தது. இன்று, 17ம் தேதி சங்காரபுரிகோட்டை நிகழ்வு, பின்னர் ஒவ்வொரு நாளும், அர்ச்சுனன் தபசு, தர்மராஜா வீதிஉலா ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.வரும், 19ம் தேதி தர்மராஜா திருவீதி உலா, அடுத்தடுத்த நாட்களில் மாடுபிடி சண்டை, படுகளம் ஆகிய நிகழ்வுகளும், வரும், 22ம் தேதி மாலை, 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடைபெறும். இதில் கிராமத்தைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்டவர்கள் காப்பு கட்டி தீமிதிப்பர். இரவு, அம்மன் திருவீதி உலா நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ