உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 57 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

57 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக கட்டடம், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு நேற்று, கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்த விழாவில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.பின் நடந்த விழாவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக, 27 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 27 லட்சத்து, 48,600 ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டது.மேலும், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் நவீன செயற்கை அவையங்கள், 11 லட்சத்து 15,600 மதிப்பிலும், 15 பயனாளிகளுக்கு, 8 கிராம் தங்க நாணயங்கள், 8 லட்சத்து 44,750 ரூபாய் மதிப்பிலும் என, மொத்தம் 47 லட்சத்து 7,950 ரூபாய் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் வழங்கினார்.நிகழ்ச்சியில், திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், திருவள்ளூர் நகராட்சி தலைவர் உதயமலர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை