மேலும் செய்திகள்
சாலை பள்ளங்கள் சீரமைப்பு: மாநகராட்சி தீவிரம்
25-Aug-2025
கும்மிடிப்பூண்டி:சிறுவாபுரி கோவிலுக்கு செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சிறுவாபுரி கோவிலை இணைக்கும் புதுரோடு சந்திப்பு முதல் அகரம் சந்திப்பு வரையிலான, 6 கி.மீ., சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறையினர் பராமரிப்பில் உள்ளது. இதில், அகரம் சந்திப்பு முதல் சிறுவாபுரி வரையிலான 3 கி.மீ., சாலை, சில நாட்களாக பெய்து வரும் மழையால் சேதமடைந்து, சில இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வரும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் திக்குமுக்காடி போகின்றனர். எனவே, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25-Aug-2025