உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காப்பர் திருடிய  தொழிலாளி கைது

காப்பர் திருடிய  தொழிலாளி கைது

கும்மிடிப்பூண்டி:சென்னை, மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ், 19. கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் ‛சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் ' என்ற பெயரில் இயங்கி வரும், தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, வேலையில் இருந்த போது, இரண்டரை கிலோ காப்பர் பொருட்களை திருடி, உடையில் மறைத்துள்ளார். அதை கண்ட மேற்பார்வையாளர், கையும் களவுமாக பிடித்துள்ளார்.தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் அளித்த புகாரின்படி, வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், ரமேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ