மேலும் செய்திகள்
மருத்துவமனை வளாகத்தில் முகாமிட்ட காட்டு மாடு
02-Mar-2026
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலை வளாகத்தில், குளவி கொட்டியதில், தொழிலாளி உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம், ஓடக்கரை பகுதியை சேர்ந்தவர் தங்கமாரி, 32. இவர், தேர்வாய்கண்டிகை சிப்காட் வளாகத்தில் உள்ள 'பிசிபிஎல்' என்ற தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். தொழிற்சாலை வளாகத்தில், நேற்று பணியில் இருந்த தங்கமாரியை குளவி ஒன்று கொட்டியது. இதில் மயக்கமடைந்தவரை அங்கிருந்தோர் மீட்டு மஞ்சங்கரணை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனை பரிசோதனையில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
02-Mar-2026