மேலும் செய்திகள்
தண்ணீரில் விஷம் கலப்பு பள்ளி மாணவர்கள் மயக்கம்
15-Jul-2025
துாத்துக்குடி; துாத்துக்குடி மூன்றாம் மைல் பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி செயல்படுகிறது. 1000த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் உணவு இடைவேளையின்போது, மெக்கானிக்கல் பிரிவில் முதலாமாண்டு படிக்கும் ஆறுமுகநேரியை சேர்ந்த வெங்கடேசன் பரணி, 17, என்ற மாணவர் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடியை வைத்து சிலர் விளையாடினர். திடீரென அந்த வெடி, பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், துாத்துக்குடி தபால் தந்தி காலனியை சேர்ந்த மாதவன், 16, முரளி கார்த்திக், 17, ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாலிடெக்னிக் கல்லுாரிக்குள் நாட்டு வெடிகுண்டு வெடித்ததாக தகவல் பரவியதால் மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
15-Jul-2025