விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்.,சுக்கு பிடிவாரன்ட்
துாத்துக்குடி: துாத்துக்குடி, முத்தையாபுரத்தில், 2020ல் நடந்த ஒரு கொ லை வழக்கு தொடர்பான விசாரணை, துாத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில், விசாரணை அதிகாரி அப்போதைய முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார். தற்போது, சேலம் ரயில்வே இன்ஸ்பெக்டராக உள்ளார். வழக்கு விசாரணைக்காக, பலமுறை சம்மன் அனுப்பியும், சிவசெந்தில்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில், அவரை கைது செய்து, வரும் 29ல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சேலம் ரயில்வே டி.எஸ்.பி.,க்கு, துாத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தாண்டவன், நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார்.