உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கவின் தந்தைக்கு போலீஸ் பாதுகாப்பு

கவின் தந்தைக்கு போலீஸ் பாதுகாப்பு

துாத்துக்குடி; ஆணவ கொலை செய்யப்பட்ட கவின் வீட்டிற்கும், அவரது தந்தைக்கும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துாத்துக்குடி மாவட்டம், ஏரல் அடுத்த ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் கவின் செல்வ கணேஷ், 27. ஐ.டி., ஊழியரான இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர். ஜூலை 2ல் ஆணவ கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, மாநில எஸ்.சி., - எஸ்.டி., ஆணைய தலைவர் தமிழ்வாணன் விசாரணை நடத்தினார். அப்போது, கவின் தந்தை சந்திரசேகர் உயிருக்கும், குடும்பத்தாருக்கும் ஆபத்து இருப்பதாக, உறவினர்கள் கூறினர். இதையடுத்து, கவின் வீட்டிற்கும், அவரது தந்தைக்கும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ