உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / மின் கம்பி அறுந்து ரயில் சேவை பாதிப்பு

மின் கம்பி அறுந்து ரயில் சேவை பாதிப்பு

ஜோலார்பேட்டை:கர்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து, திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டைக்கு தினமும் சொர்ணா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை, 5:40 மணிக்கு புறப்பட்ட அந்த ரயில், தாமலேரிமுத்துார் அருகே வந்தபோது, ரயில் இன்ஜினுக்கு செல்லும், 25 கிலோ வோல்ட் உயர் மின்னழுத்த கம்பி துண்டாகி விழுந்தது. இதனால் ரயில் நடு வழியில் நின்றது.பின் தொடர்ந்து வந்த காவிரி எக்ஸ்பிரஸ், பெங்களூரு மெயில், சாம்ராஜ் நகர் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஜோலார்பேட்டை ரயில் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். ரயில்வே பணியாளர்கள், மூன்றரை மணி நேரம் போராடி மின்னழுத்த கம்பியை சீரமைத்தனர். பின், ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் பயணியர் கடும் அவதிக்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ