விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கலந்தாய்வு
காங்கேயம்:தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின், காங்கேயம் பகுதி விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம், காங்கேயம் சாம்பவலசு கோவில் அருகே நேற்று காலை நடந்தது. சங்கத்தலைவர் சண்முகசுந்தரம், பொது செயலாளர் முத்து விஸ்வநாதன் தலைமை வகித்தனர்.ஐ.டி.பி.எல்., எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ளது. இந்நிலையில் திட்ட பாதிப்புகள் குறித்து தெரிவிக்க காங்கேயம், சூலுார், பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க வேண்டும்.திருப்பூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் அருண்ராஜை சந்திப்பது, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவை சந்தித்து, விவசாய நிலம் பாதிக்காத வகையில், சாலையோரம் குழாய்கள் பதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.