உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 31 அரசு உதவி பெறும் பள்ளியில் காலை சிற்றுண்டி  திட்டம் துவக்கம்

31 அரசு உதவி பெறும் பள்ளியில் காலை சிற்றுண்டி  திட்டம் துவக்கம்

திருப்பூர்';திருப்பூர் மாவட்டத்தில், 31 அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நேற்று துவங்கி வைக்கப்பட்டது.தமிழக அரசு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், முதல்கட்டமாக குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, 77 அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் இத்திட்டம் துவங்கப்பட்டது.இரண்டாவது கட்டமாக, 251 கிராம ஊராட்சிக்கு உட்பட்ட, 797 பள்ளிகள், 14 பேரூராட்சிகளில், 95 பள்ளிகள், ஆறு நகராட்சிகளில், 59 பள்ளிகள்; மாநகராட்சியில் உள்ள, 120 பள்ளிகள் என, 1,081 பள்ளிகளில் பயிலும், 75 ஆயிரத்து, 482 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.மூன்றாம் கட்டமாக, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள, 10 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 31 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 1,742 மாணவர்களுக்கு நேற்று முதல் சிற்றுண்டி திட்டம் துவங்கப்பட்டுள்ளது.உடுமலை ஒன்றியம், குறிச்சிக்கோட்டை, ஆர்.வி.ஜி., அரசு உதவி பெறும் பள்ளியில், இத்திட்ட துவக்க விழா நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்த விழாவில், அமைச்சர் சாமிநாதன், காலை சிற்றுண்டி திட்டத்தை துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை