உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இயல்பை விட 62.03 மி.மீ., மழை அதிகம் சாகுபடிக்கான இடு பொருட்கள் இருப்பு

இயல்பை விட 62.03 மி.மீ., மழை அதிகம் சாகுபடிக்கான இடு பொருட்கள் இருப்பு

உடுமலை;இயல்பான மழையை விட கூடுதல் மழை பெய்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு, 618.20 மி.மீ., ஆகும். ஜன., முதல், ஜூலை மாதம் முடிய சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவு, 198.20 மி.மீ., ஆகும்.நடப்பாண்டு, கோடை கால மற்றும் குளிர்கால மழை குறைந்த நிலையிலும், தென்மேற்கு பருவ மழை கூடுதலாக பெய்து வருகிறது. நேற்று வரை, 260.23 மி.மீ., மழை பெய்துள்ளது.சராசரியாக பெய்ய வேண்டிய மழையின் அளவைவிட நடப்பாண்டு, கூடுதலாக, 62.03 மி.மீ., மழை பெய்துள்ளது.உடுமலை, அமராவதி அணை நிரம்பியுள்ளதோடு, பி.ஏ.பி.,திட்ட தொகுப்பு அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளதால், உடுமலை பகுதிகளில், பசுமை திரும்பியுள்ளது.நெல், கரும்பு, காய்கறி பயிர்கள், மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.பயிர் சாகுபடிக்கு தேவையான, நெல் மற்றும் பிற பயிறு வகை தானிய விதைகள், போதிய அளவு மாவட்டத்தில் இருப்பில் உள்ளது.விதை நெல் 50.12 டன், சிறுதானிய பயிறுகள், 14.23 டன், பயறு வகை பயிர்கள் விதை, 35.01 டன், எண்ணெய் வித்து பயிர் விதைகள், 27.33 டன் இருப்பில் உள்ளது.நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளது.யூரியா, 2, 929 டன், டி.ஏ.பி., 707 டன், காம்ப்ளக்ஸ், 6,080 டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட், 745 டன், கூட்டுறவு சங்கங்கங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் இருப்பு உள்ளது, என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ