உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உளி தாங்கும் கல்தானே மண் மீது சிலையாகும்

உளி தாங்கும் கல்தானே மண் மீது சிலையாகும்

'திருப்பூரில் தேசிய விளையாட்டான ஹாக்கியை பிரபலப்படுத்த தொடர் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்' என்கிறார், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் ராஜாராம்.

அவர் கூறியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில், ஹாக்கி விளையாட்டில் உடுமலையில் உள்ள பள்ளி, கல்லுாரிகள் சிறந்து விளங்கின. கடந்த, 5 ஆண்டாக சிக்கண்ணா அரசு கல்லுாரி மாணவர்கள், தொடர்ச்சியாக ஹாக்கி பயிற்சி பெறுகின்றனர். தொடர் பயிற்சி வெற்றி தேடித்தரும். தென் மாநில அளவில் நடக்கும் ஹாக்கிப் போட்டியில், பாரதியார் பல்கலை அணிக்கு, குறைந்தது, 5 மாணவர்கள் இக்கல்லுாரியில் இருந்து தேர்வாகின்றனர்.சிக்கண்ணா அரசு கல்லுாரியில் கடந்த நான்காண்டாக மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி நடத்தினோம். இதனால், ஹாக்கி விளையாட்டில் ஆர்வமுள்ள விருதுநகர், கன்னியாகுமரி, தேனி, தஞ்சை உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் மாணவர்கள் கூட, சிக்கண்ணா கல்லுாரியுடன் இணைந்து, ஹாக்கி விளையாடி வருகின்றனர்.உடுமலை பெதப்பம்பட்டி பள்ளி, திருப்பூர் சென்சுரி பவுண்டேஷன் பள்ளியில் மாணவருக்கான பயிற்சி, உடுமலை ஜி.வி.ஜி., கல்லுாரியில் பெண்களுக்கான பயிற்சி வழங்குகின்றனர். மாவட்ட, மாநில போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு தகுதி வாய்ந்தவர்களை உருவாக்குகின்றனர்.'ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு' சார்பில் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளில், ஆண்டு தோறும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், ஏதாவது ஒரு பிரிவில், மாவட்டங்களுக்கு இடையேயான போட்டியை, திருப்பூர் மாவட்ட ஹாக்கி சங்கம் ஏற்று நடத்த வேண்டும்; தொடர்ச்சியாக இதுபோன்ற போட்டி நடத்தும் போது, ஹாக்கி பிரபலமடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ