சில வரி செய்தி :வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி
வெள்ளாடு வளர்ப்பு பயிற்சிதிருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிர்புறமுள்ள, கால்நடை பல்கலை., பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், நாளை, (28ம் தேதி) காலை, 10:00 மணிக்கு, 'வெள்ளாடு வளர்ப்பு' தொடர்பான பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.''விவசாயிகள் பங்கேற்று, வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்த சந்தேகங்களுக்கு தெளிவு பெற்றுக் கொள்ளலாம். மேற்கொண்டு விவரம் தேவைப்படுவோர், '0421 - 2248524' என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்'' என, பயிற்சி மைய தலைவர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.மின்கம்பத்தில் விரிசல் (படம்)திருப்பூர், சாமுண்டிபுரம் மெயின் ரோடு, வளையங்காடு, வ.உ.சி., நகர், 2வது வீதியில் டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டுள்ளது. டிரான்ஸ்பார்மரை தாங்கியுள்ள மின்கம்பத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதால், அப்பகுதி மக்கள் அச்சம் எழுந்துள்ளது. 'விரிசல் அதிகமானால், விபரீதம் ஏற்படும் வாய்ப்புள்ளது' என, மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 'மின்வாரியத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.