உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டில் கழிவுநீர் தேக்கம்: சோக்பிட் அமைக்க அறிவுரை

ரோட்டில் கழிவுநீர் தேக்கம்: சோக்பிட் அமைக்க அறிவுரை

அனுப்பர்பாளையம்;திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு, காவிலிபாளையத்தில், 152 வீடுகள் கொண்ட குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் செல்ல'டிஸ்போஸபில் பாயின்ட் இல்லை. இதனால், கழிவுநீர் ரோட்டில் தேங்கி அசுத்தம் ஏற்படுத்தி வருகிறது.இதனால், அப்பகுதியில் சரக்கு வாகனங்கள் சகதியில் சிக்கி கொள்கிறது. இரவு நேரத்தில் பைக்கில் வருபவர்கள் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். இது குறித்து, கவுன்சிலர் தங்கராஜ், மாநகராட்சி முதலாம் மண்டல அலுவலகத்தில் முறையிட்டார்.இதனைடுத்து, மண்டல உதவி கமிஷனர் கனகராஜ், சுகாதார அலுவலர் ராஜேந்திரன், ஆகியோர் சம்மந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.அங்குள்ள வீடுகளில் இருந்து வரும் கழிவு நீரை தடுக்கும் வகையில் அந்தந்த வீடுகளில் உறிஞ்சுகுழி (சோக்பிட்) அமைக்க வலியுறுத்தி, நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்துள்ளனர். மேலும், 'டிஸ்போஸல் பாயின்ட்' அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உதவி கமிஷனர் அப்பகுதி மக்களிடம் உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ