உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மதுக்கூடமாக மாறிய அங்கன்வாடி மையம்?

மதுக்கூடமாக மாறிய அங்கன்வாடி மையம்?

அவிநாசி: அவிநாசி, மடத்துப்பாளையம், வினோபா வீதியில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இம்மையத்தில், 25 குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். மையம் அருகில் கோவில் உள்ளது.கடந்த இரண்டு நாட்களாக பொங்கல் விழா நடந்தது. விழாவில், பங்கேற்க வந்தவர்கள், மையம் முன் இறைச்சியை வெட்டி சுத்தம் செய்வது, அதனை தீயில் வாட்டி சமையல் போன்றவையும் அங்கேயே செய்துள்ளனர்.இதுதவிர மையத்திலேயே அமர்ந்து சிலர் மது அருந்தியுள்ளனர். இதனால், ஆங்காங்கே பிளாஸ்டிக் டம்ளர்கள், இறைச்சி துண்டுகள், எலும்புகள், காலி மது பாட்டில், என அப்பகுதியே மதுக்கூடமாக காட்சியளிக்கிறது. இந்த அலங்கோலத்தை பார்த்த பெற்றோர் தங்களது குழந்தைகளை வீட்டுக்கு திருப்பி அழைத்து சென்றனர்.இது குறித்து அப்பகுதியினர் சிலர் கூறுகையில், 'கடந்தாண்டும் இதேபோல், இறைச்சிகளை அங்கன்வாடி மைய வாசலில் வைத்து வெட்டி சுத்தம் செய்வது, சமைப்பது போன்றவை செய்தனர். அப்போதே பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டோம். மீண்டும் இந்தாண்டு மையத்தை மீண்டும் மதுக்கூடமாக மாற்றி விட்டனர்.அசுத்தமும் செய்துள்ளதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குழந்தைகள் நலன் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மையத்தை சுற்றிலும் பாதுகாப்பு கம்பி வேல, கதவு அமைத்து தர வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை