பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள்
உடுமலை;திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில், 3ம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடந்தன.திருப்பூர் மாவட்ட தட கள சங்கம் சார்பில், தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, உடுமலை அரசு கல்லுாரி மைதானத்தில், பள்ளி மாணவர்களுக்கான, 3ம் ஆண்டு தடகள போட்டிகள் நடந்தன.திருப்பூர் மாவட்ட தடகள சங்கத்தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் கல்யாணி போட்டிகளை துவக்கி வைத்தார். இதில், மாவட்டத்திலுள்ள, நுாற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள், கிழக்கு லயன்ஸ் சங்கம், அரசு கல்லுாரி தட கள சங்கம், சிஸ்கா இளைஞர் சமூக அறக்கட்டளை, மை இன்டியா மை ஸ்கூல் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.