உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விழிப்புணர்வு சைக்கிள் போட்டி

விழிப்புணர்வு சைக்கிள் போட்டி

திருப்பூர்; உலக மகளிர் தினத்தை முன்னிட்டு,'ேஹப்பி சைக்கிள்', திருப்பூர் ரைடர்ஸ் கிளப், 'திருப்பூர் லேடீஸ் சர்க்கிள்- 44' சார்பில், மகளிர் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் போட்டி நேற்று நடந்தது.திருப்பூர், காந்திநகர், டெலிபிரஷ் கார்னர் முன் திரண்ட மகளிர் உடற்பயிற்சி, யோகா, செய்தனர்.மகளிர் பங்கேற்ற, விழிப்புணர்வு சைக்கிள் போட்டியை துவக்கி வைத்து 'திருப்பூர் லேடீஸ் சர்க்கிள் -44' ஒருங்கிணைப்பாளர் தாரணி பேசினார்.முன்னதாக, திருப்பூர் அவிநாசி ரோடு, காந்திநகரில் துவங்கிய மகளிர் தின விழிப்புணர்வு சைக்கிள் போட்டி, திருமுருகன்பூண்டி, பைபாஸ் பாலம் அருகே நிறைவு பெற்றது. மகளிர் பலர் பங்கேற்று, சைக்கிள் ஓட்டி, மகளிர் தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை