உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாய் கருத்தடை மையம் பல்லடத்தில் அமையுமா?

நாய் கருத்தடை மையம் பல்லடத்தில் அமையுமா?

பல்லடம்: பல்லடம் அரசு மருத்துவமனையில் மட்டும், மாதம் சராசரியாக, 80க்கும் மேற்பட்டவர்கள், தெரு நாய்களால் கடிபட்டு சிகிச்சை பெற வருகின்றனர்.தெரு நாய்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் பல்லடம் நகராட்சி மற்றும் ஒன்றியத்தில் கிடையாது. திருப்பூர் மாநகராட்சி அல்லது இதர நகராட்சி பகுதியில் இருந்து நாய் பிடி வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, அவற்றுக்கு கருத்தடை செய்யப்படுகின்றன. புகார் எழுந்தால் மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனால், ஆண்டுதோறும் நாய்களின் பெருக்கம் அதிகரிப்பதுடன், அவற்றால் கடிபட்டு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, பல்லடத்தில் நாய்களுக்கான கருத்தடை மையம் அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி