அரசு ஊழியர்கள் மனித சங்கிலி
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக, ரோட்டில் இறங்கி போராடி, மாநில அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மனித சங்கிலி இயக்கம் மற்றும் திறந்தவெளி கருத்தரங்கு நடந்தது.மாவட்ட தலைவர் ராணி தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் துணை குழு உறுப்பினர் ஆதிலட்சுமி வரவேற்றார். ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் பவித்ரா தேவி, போராட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநில துணை தலைவர் பரமேஸ்வரி பேசினார்.