உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புதிய பாலத்தில் உடைப்பு தரம் சரியில்லை என புகார்

புதிய பாலத்தில் உடைப்பு தரம் சரியில்லை என புகார்

அனுப்பர்பாளையம் : திருப்பூர் மாநகராட்சி, இரண்டாவது மண்டலம், ஏழாவது வார்டு, போயம் பாளையம் - சக்தி நகர் மூன்று ரோடு சந்திக்கும் பகுதியில் மாநகராட்சி சார்பில் சிறிய பாலம் கட்டப்பட்டது.பாலம் கட்டப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில், அதில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.அந்த ரோட்டில் ரேஷன் கடை, மாநகராட்சி பள்ளி, அதிக குடியிருப்புகள், பனியன் நிறுவனங்கள் உள்ளன.எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும்.உடைந்த பாலத்தால் பாதிப்பு ஏற்படும் முன் சீர் செய்ய மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ