| ADDED : மே 17, 2024 11:01 PM
உடுமலை;உடுமலையில், பொள்ளாச்சி ரோட்டையும், பைபாஸ் ரோட்டையும் இணைக்கும் ரோட்டில் அகற்றப்பட்ட பாலத்தை கட்ட வேண்டும், என, பொதுமக்கள் வலியுறுத்தினர்.உடுமலையில், பொள்ளாச்சி ரோட்டிலிருந்து, பைபாஸ் ரோட்டிற்கு செல்லும் இணைப்பு ரோடு பிரதான வழித்தடமாக இருந்தது. பஸ் ஸ்டாண்டிலிருந்து அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு செல்லும் பஸ்கள் மற்றும் பஸ் ஸ்டாண்டிலிருந்து பொள்ளாச்சி ரோடு வழியாக, பைபாஸ் ரோடு செல்லும் வாகனங்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வந்தன.இரு ஆண்டுக்கு முன், மழை நீர் வடிகால் துார்வாரும் பணியின் போது, இணைப்பு வழித்தடத்தில், பைபாஸ் ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த பாலம் அகற்றப்பட்டது. அதன்பின் கட்டப்படாதததால், அரசு பஸ்கள் மற்றும் வாகனங்கள், நகர நெரிசலில், தாராபுரம் ரோடு சந்திப்பு சென்று திரும்ப வேண்டிய நிலை உள்ளது. எனவே, அகற்றப்பட்ட பாலத்தை உடனடியாக கட்ட, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.