உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொப்பரை விலை ஏறுமுகம்

கொப்பரை விலை ஏறுமுகம்

பொங்கலுார்;கடந்த மாதம் வரை கொப்பரை ஒரு கிலோ, 90 ரூபாய்க்கு விலை போனது. உற்பத்தி செலவு அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து தேங்காய் விலை குறைந்ததால் விவசாயிகள் சோகத்தில் இருந்தனர்.கோடையில் போதுமான மழை பெய்யாதது, கடும் வெயில் கொளுத்தியது போன்றவற்றால் தேங்காய் விளைச்சல் சரிவடைந்துள்ளது. தேங்காய் வரத்து குறைந்ததை அடுத்து விலையும் ஏறுமுகமாக உள்ளது. தற்போது கொப்பரை ஒரு கிலோ அதிகபட்சமாக, 103 ரூபாய் வரை விலை போகிறது. கொப்பரை விலை ஏறுமுகமாக இருப்பதால் விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ