உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்க ஸ்ட்ராங் ரூமில் எல்லைக்கோடு

ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்க ஸ்ட்ராங் ரூமில் எல்லைக்கோடு

திருப்பூர்,;ஓட்டுப்பதிவு முடிந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தனித்தனியே வைப்பதற்காக, ஸ்ட்ராங் ரூமில், நீல நிற கோடுகள் வரையும் பணி நடைபெற்று வருகிறது.திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை மையம், கலெக்டர் அலுவலக அருகே உள்ள எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ளது.ஓட்டுப்பதிவு முடிந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைப்பதற்கு ஸ்ட்ராங் ரூம், ஓட்டு எண்ணிக்கை அரங்கம், பார்வையாளர் அறை, கன்ட்ரோல் ரூம் உட்பட அனைத்து கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும்பணி நடைபெற்று வருகிறது.லோக்சபா தேர்தலுக்காக, ஆறு சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 1,745 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் 19ம் தேதி ஓட்டுப்பதிவு முடிந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், எல்.ஆர்.ஜி., கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டுவரப்படும். தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள ஸ்டராங் ரூமில், ஓட்டுப் பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் வைக்கப்படும்.இதற்காக, ஸ்ட்ராங் ரூம் தரையில், நீல நிற பெயின்டில், கட்டங்கள் வரையப்பட்டு, வெள்ளை நிறத்தில் ஓட்டுச்சாவடி எண் எழுதும் பணி நடைபெற்றுவருகிறது. ஸ்ட்ராங் ரூமில், ஒவ்வொரு ஓட்டுப்பதிவு இயந்திரமும், குறிப்பிட்ட ஓட்டுச்சாவடி எண் குறிக்கப்பட்டுள்ள கட்டத்துக்குள் கொண்டுவந்து வைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ