உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நெரிசலில் தப்ப மாற்றுப்பாதையே துணை

நெரிசலில் தப்ப மாற்றுப்பாதையே துணை

திருப்பூர்:பல்லடத்தில் பாலம் வேலை நடப்பதால், வாகனங்கள் சாமளாபுரம், காரணம்பேட்டை வழியாக செல்லுமாறு, மங்கலம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.பல்லடம் நகரப் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. உயர் மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியிருக்கிறது. இதனால், பல்லடம் இணைப்பு ரோடுகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.அவிநாசி மற்றும் திருப்பூர் - மங்கலம் ரோடு வழியாக மங்கலம் வந்து, பல்லடம் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோபி, சத்தியமங்கலம், அவிநாசி சுற்றுப்பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், மங்கலம் வழியாக, எளிதாக பல்லடத்தை அடைகின்றன.திருப்பூர் நகரப்பகுதிக்குள் செல்லாமல் இப்பாதை பல்லடம் செல்வதால், வாகனங்கள் அதிகமாக சென்று வருகின்றன. உயர்மட்ட பாலம் பணி துவங்கி இருப்பதால், மங்கலம் வழியாக பல்லடம் செல்லும் வாகனங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகும். எனவே மங்கலத்தில் இருந்து பல்லடம் ரோட்டில் வரும் வாகனங்கள் சாமளாபுரம் சென்று, அங்கிருந்து காரணம்பேட்டை வழியாக, திருச்சி ரோட்டை சென்றடையலாம் என, மங்கலம் போலீசார் அறிவித்துள்ளனர்.அவிநாசி வழியாக மங்கலம் ரோட்டில் வரும் வாகனங்கள், பல்லடம் வந்து, பிறகு பொள்ளாச்சி, உடுமலை ரோட்டில் செல்வது வழக்கம்.காரணம்பேட்டை வழியாக சென்றாலும், காமநாயக்கன்பாளையம் வழியாக பொள்ளாச்சி ரோட்டை சென்றடையலாம். வாகன நெரிசலில் சிக்குவதை தவிர்த்து மாற்று பாதையை பயன்படுத்த வேண்டும் என மங்கலம் போலீசார் ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ