/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டை ஆக்கிரமித்து தி.மு.க., பொதுக்கூட்ட மேடை; பொதுமக்கள் அதிருப்தி
ரோட்டை ஆக்கிரமித்து தி.மு.க., பொதுக்கூட்ட மேடை; பொதுமக்கள் அதிருப்தி
அனுப்பர்பாளையம்; திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில், மத்திய அரசுக்கு எதிராக கண்டன பொது கூட்டம் நேற்று பி.என்., ரோடு பிச்சம்பாளையத்தில் நடைபெற்றது.அதற்கான மேடை பிச்சம்பாளையத்தில் இருந்து, அங்கேரி பாளையம் செல்லும் பிரதான சாலையை ஆக்கிரமித்து அமைத்து இருந்தனர். மேடை அமைப்பதற்கான பணி நேற்று மதியம் முதல் நடந்தது. இதனால், ரோட்டை அடைத்து போக்குவரத்தை நிறுத்தி விட்டனர். அப்பகுதியில் அதிகளவு பனியன் நிறுவனங்கள் உள்ளன. ரோடு அடைக்கப்பட்டதால், சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். பனியன் தொழிலாளர்களும், பொதுமக்களும் கடும் அதிருப்தி அடைந்தனர்.---ரோட்டை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட பொதுக்கூட்ட மேடை.