சம்பளம் வாங்குவது எளிது குடும்பச்செலவே கடினம்
ரஞ்சித் குமார், பெட்ஷாப் உரிமையாளர், பெருந்தொழுவு:சிறுவயதிலிருந்தே பெட் ஷாப் நடத்துவதில் ஆர்வம். இதிலிருந்து வருமானம் ஈட்ட முடியும் என்பதால் இதை தேர்வு செய்தேன். ஊர்வன, பறப்பன, நீர், நிலம் வாழ்வன என ஒவ்வொரு உயிரினங்களை பற்றியும் தெளிவான அறிவு வேண்டும். எந்த விலங்குகள், பறவைகளை விற்பனை சட்டபூர்வமாக விற்பனை செய்யலாம் என்று தெரிந்துவைத்திருக்க வேண்டும். முன்பு வேலைக்குச் சென்றபோது 34 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினேன். சம்பளம் வாங்குவது எளிதுதான். ஆனால், குடும்பத்தை நடத்துவது கஷ்டமாக இருந்தது. தற்போது, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் குடும்பச் செலவு ஆகிறது. இதை சுலபமாக சமாளிக்க முடிகிறது. கடை வியாபாரத்தை விட ஆன்லைன் வியாபாரம் செய்வதன் மூலம் தொழிலை தொடர்ந்து நடத்த முடிகிறது. இதை நான் மகிழ்ச்சியாகவே செய்து வருகிறேன்.