மின் வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்
உடுமலை: உடுமலையில், மின் வாரிய ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.மின் வாரியத்தில் ஆரம்ப கட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தவும்,ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், தர்ணா போராட்டம் நடந்தது.துணைத்தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட இணைச்செயலாளர் ஜெகதீசன் துவக்கி வைத்தார்.திட்டத்தலைவர் ஜெகநாதன், செயலாளர் கோவிந்தன், பொருளாளர் பாலசுப்ரமணியம் கோட்ட தலைவர்கள் வெள்ளியங்கிரி, ராஜ்குமார், ஜோன் பிரைட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.