உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெண் தொழிலாளர் உடல்நலனில் ஏற்றுமதி நிறுவனங்கள் அக்கறை

பெண் தொழிலாளர் உடல்நலனில் ஏற்றுமதி நிறுவனங்கள் அக்கறை

திருப்பூர்,:திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், திருப்பூர் தொழில் வளம் பங்களிப்போர் கூட்டமைப்பு, பெண் தொழில் முனைவோர் துணைக்குழு சார்பில், பெண்களுக்கான மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கத்துடன் இணைந்து, அந்தோணி கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் நடந்தது. ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.பொதுசெயலாளர் திருக்குமரன், திருப்பூர் தொழில்வளம் பங்களிப்போர் கூட்டமைப்பு தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிர்வாகிகள் பேசியதாவது:தொழிற்சாலைகளில், 60 சதவீதத்துக்கும் அதிகமாக பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர் நலன் கருதி, மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும், பரிசோதனை முகாமும் நடத்தப்படுகிறது. இதுவரை நடந்த முகாம்களில், 40 பெண்களுக்கு அறிகுறி கண்டறியப்பட்டு, தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பெண் தொழிலாளர்கள் உடல்நலனில், சம்பந்தப்பட்ட நிறுவனம் மட்டுமல்ல; ஏற்றுமதியாளர்கள் சங்கமும் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. தொழிலாளர் பாதுகாப்புக்கான அனைத்து மருத்துவ முகாம்களை பயன்படுத்தி, பெண் தொழிலாளர், உடல் நலனை பரிசோதித்து, சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்; அனைத்து தொழிலாளர்களும், 'வருமுன் காப்போம்' என்ற முறையில், நோய் வருமுன் தற்காத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர்கள் பேசினர்.----பெண் தொழிலாளருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்ரமணியன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை